ajax_ns_dental (4)Markham NS DENTAL பற்சிகிச்சை நிறுவனத்தின் மற்றுமோர் கிளை நேற்று 30 ம் திகதி (Jan 30, 2016) ஏஜக்ஸ் மாநகரில் AJAX NS DENTAL எனும் பெயரில் தமி்ழ் பேசும் மக்களுக்கு மட்டுமன்றி பல்கலாசார மக்களுக்கும் சேவையாற்றும் வகையில் மிகவும் கோலாகலமான முறையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

1801 Harwood Avenue North, Unit # 18 Ajax என்னும் முகவரியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த பற் சிகிச்சை நிலையம் மிகவும் சிறப்பான முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சிகிச்சை வழங்கும் தொழில் நுட்பங்கள் கொண்ட ஒரு நவீன நிறுவனமாக அமைந்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் திரு மார்க் ஹொலன்ட் (Mark Holland)மற்றும் ஹரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) ஆகியோர் தொடக்க நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு நாடாவை வெட்டி நிலையத்தை ஆரம்பித்துவைத்தனர்.

ஆரம்ப நிகழ்வை முன்னிட்டு “Operation Smile” என்ற அமைப்புக்கு AJAX NS DENTAL சார்பில் $2001.00 பண அன்பளிப்பும் வழங்கப்பட்டது. இந்த அமைப்பு பிறக்கும் போது சொண்டு பாதிக்கப்பட்ட (cleft lip) குழந்தைகளுக்கு அதை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்ய உதவும் ஒரு அமைப்பாகும்.

நூற்றுக்கணக்கான மக்களும் பிரமுகர்களும் கலந்து கொண்ட பெரு நிகழ்வாக AJAX NS DENTAL நிறுவன ஆரம்ப விழா அமைந்த்திருந்தது.

மேற்படி திறப்பு விழாவை சிறப்பாக நடத்துவதற்கு திரு சுதர்சன் மற்றும் DR திருமதி நளினி சுதர்சன் ஆகியோர் தங்கள் குழுவினரோடு இணைந்து அனைத்து ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்து வந்தவர்கள் அனைவரினதும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பெற்றனர்.

வாழ்த்துக்கள்.

ajax_ns_dental (4) ajax_ns_dental (1)ajax_ns_dental (2)ajax_ns_dental (3)ajax_ns_dental (5)

படங்கள் நன்றி: கனடா உதயன்

Share with your Friends: