ns_dental

At the Ajax NS Dental Office Opening Press Meet, Wed. Jan 27, 2016, Ajax

Markham NS DENTAL பற்சிகிச்சை நிறுவனத்தின் மற்றுமோர் கிளை எதிர்வரும் 30 ம் திகதி ஏஜக்ஸ் மாநகரில் AJAX NS DENTAL எனும் பெயரில் ஆரம்பமாகவுள்ளது.  இதற்காக AJAX NS DENTAL பற்சிகிச்சை நிறுவனத்தின் நிறுவனத்தினர் நேற்று கனடிய ஊடகத் துறையினருடன் சந்திப்பு நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்வில் அவர்கள் தமது புதிய சிகிச்சை நிறுவனத்தையும் அதில் உள்ள வசதிகளையும் வந்தவர்களுக்கு காண்பித்ததுடன் தமது சேவை மற்றும் தமது நோக்கங்களை ஊடகத் துறையினருடனும், அதனுடாக மக்களுடனும் பகிர்ந்துகொள்கின்றனர்.

பின்வரும் சிகிச்சைகளையும், சேவைகளும் அவர்கள் வரும் 30 ம் திகதி முதல் அளிக்கவுள்ளனர்.

ஏஜக்ஸ் NS Dental குடும்பமும் நண்பர்களும் இணைந்து எமது புதிய கிளையின் திறப்பு விழாவிற்கு உங்களை வரவேற்பதில் பெரும் ஆனந்தம் அடைகிறோம்.  பல கனவுகள், எதிர்பார்ப்புகள், அபிலானஷகளோடு துறாம் (Durham) பகுதியில் புதிய ஆரோக்கியமான அழகிய புன்னகைகளை உருவாக்க எம்மை தயார்படுத்தியுள்ளோம். ஏஜக்ஸ் NS Dental இல் Cutting Edge தொழிறுட்பத்தைக் கொண்டு சிறந்த ஈடுபாடுடன், உங்கள் தேவைகளை அறிந்து செயற்படும் ஊழியர்கள் ஆகியவற்றுடன் பல் மருத்துவத்தைப் பற்றிய தவறான உங்கள் எண்ணத்தை மாற்றியமைத்து உங்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தக் காத்திருக்கிறோம்.

நாம் மாற்றுக்கருத்தில்லாத தரமான சேவையை வழங்குபவர்கள் என்று ஏற்கனவே மார்க்கம் நகரில் நிரூபித்திருக்கின்றோம்.  அதே சேவையை உங்களின் தேவையை அறிந்து ஏஜக்ஸ் பகுதியிலும் வழங்குவோம் என்பது உறுதி.

ஆரோக்கியமான அர்த்தமுள்ள புன்னகைகளை உருவாக்குவதில் நாம் செலவிடும் நேரமே ஏஜக்ஸ் போன்ற நகரங்களில் வாய்வழி சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என நம்புகிறோம்.  இதுவே உங்கள் வாழ்வை நம்பிக்கையோடு கொண்டுசெல்லக்கூடிய புதிய புரட்சிகராமான புன்னகைகளுக்கான எண்ணங்களை, கருத்துக்களை உருவாக்குவதற்கு எமக்கு வழியமைத்துக்கொடுத்திருக்கின்றது.

எமது சேவைகள்:

• ஆரோக்கியமான, அர்த்தமுள்ள புன்னகைகளை உருவாக்குதல்.
• நீண்டகால ஆரோக்கியமான சிகிச்சைத் திட்டங்களை உருவாக்குதல்
• ஒவ்வொருவரது தேவையை அறிந்து, அவர்களின் நோய் குறித்த, பூரண தகவல்களையும் அறிவினையும் வழங்குதல்.
• “LET’S TALK SMILE” என்ற சமூகம் சார்ந்த அக்கறையை உருவாக்குவதன் மூலம் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க முனைதல்.
• பற் காப்புறுதி மீதான ஒளிவுமறைவற்றதன்மை.
• காத்திருப்பு நேரம் முடிந்தளவு 0 என்பதை உறுதிசெய்தல்
• உங்களுடன் வந்தவர்கள் மனஅமைதியுடன் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய காத்திருப்பு அறைகள்.
• அனைத்து வயதினருக்குமான சேவைகள்
• இலவச ஆலோசனை வழங்கல்
• வாரத்தில் ஏழு நாட்களும் சேவை

இத்தகைய சேவைகளின் மூலம் அநேகமானவர்களுக்கு ஆரோக்கியமான புன்னகையை உருவாக்க முடியும்.   ஏஜ்க்ஸ் நகரில் புதிய அங்கத்தவர்களாக இணைந்து, ஆரோக்கியமான புன்னகைகளை எமது புதுமையான கருத்துக்கள், எண்ணங்களின் மூலம் உருவாக்கி எதிர்காலத்தில் எமது எல்லைகளை விரிவாக்கமுடியும். என நம்புகிறோம்.

Ajaz NS Dental இல் விரைவில் உங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

Share with your Friends: